2வது இன்னிங்ஸிலும் சொதப்பல்: தோல்வியை நோக்கி இந்தியா!

தோல்வியை நோக்கி இந்தியா!
Last Modified திங்கள், 2 மார்ச் 2020 (06:53 IST)
தோல்வியை நோக்கி இந்தியா!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மோசமான ஆட்டம் தொடர்வதால் அந்த அணி தோல்வியின் விளிம்பில் உள்ளதால் ரசிகர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்த நிலையில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 235 ரன்கள் எடுத்ததால் இந்தியா 7 ரன்கள் முன்னிலையில் இருந்தது

இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் விளைவாக 124 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது என்பது குறிப்பிடதக்கது. இந்திய அணியின் 7 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே ரன் எடுத்து அவுட் ஆகினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் 132 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் நியூசிலாந்து அணி தற்போது விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் வெற்றி பெற 73 தேவை என்ற நிலையில் கைவசம் 10 விக்கெட்டுகள் இருப்பதால் நியூசிலாந்து அணி மிக எளிதில் இந்த போட்டியையும் தொடரையும் வென்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்திய அணிக்கு மீண்டும் ஒரு தோல்வியும், தொடர் தோல்வியும் கிடைக்க இருப்பதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :