வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 5 ஜனவரி 2021 (10:44 IST)

அடுத்த சவால்களுக்கு தயார்: வெள்ளை ஜெர்ஸி அணிந்து நடராஜன் டுவீட்!

அடுத்த சவால்களுக்கு தயார்: வெள்ளை ஜெர்ஸி அணிந்து நடராஜன் டுவீட்!
தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் கிங் நடராஜன் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் அசத்தலாக விளையாடினார் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை அடுத்து நெட் பயிற்சிக்காக அவர் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணியின் சார்பாக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வருண் சக்கரவர்த்தி திடீரென காயம் அடைந்ததால் ஒருநாள் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்
 
அதனை அடுத்த டி20 போட்டியிலும் கலந்துகொண்ட நடராஜன் அசத்தலாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும் அவர் ஆடும் 11 பேர் அணி இருப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
இந்த நிலையில் சற்று முன் நடராஜன் தனது சமூக வலைத்தளத்தில் வெள்ளை ஜெர்ஸி அணிந்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் அதில் வெள்ளை நிற ஜெர்ஸி அணியும் பெருமையான தருணம் வந்துவிட்டது என்றும், அடுத்த சவால்களை சந்திக்க தயார் எனவும் டுவிட் செய்துள்ளார். நடராஜனின் இந்த டுவீட்டிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் பலர் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது