செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 18 ஜூன் 2021 (00:19 IST)

கேது கிரகத்தால் ... புத்திர தோஷம் நீங்க பரிகாரம்!!

ஜாதகத்தில் கேது கிரகம் காரணமாக தான் புத்திர தோஷம் ஏற்பட்டிருப்பின், கீழ்க்கண்ட எளிய பரிகாரத்தைச் செய்வதின் மூலம் போக்குக்  கொள்ளலாம். மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படும் நிழல் கிரகங்கள் ராகு கேது. மேலும் ஒரு மனிதனுக்கு முக்தியை அளிக்கவல்ல  கிரகமாகவும் இது இருக்கிறது.
 
ஒருவரின் ஜாதகத்தில் கேது பகவானால் புத்திர தோஷம் இருந்தால், அவர்கள் முற்பிறவியில் மலைப்பாம்பு, கோயில் பாம்பு அல்லது குட்டி  பாம்புகளை அடித்து கொன்றதாலும், இறந்த பாம்புகளின் சாபத்தை பெற்று இப்பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லாத நிலை உண்டாக கூடும்  என்றும் கூறப்படுகிறது. 
Ads by 
 
பரிகாரம்: 200 கிராம் கொள்ளு எடுத்து இவற்றை சமபாகமாக பிரித்து, ஒரு சிவப்பு நிற துணியை ஒன்பது துணிகளில் போட்டு முடிந்து வீட்டு பூஜையறையில் சாமி படத்திற்கு முன்பாக வைத்து விடவேண்டும். அத்துடன் பிரார்த்தனை நிறைவேறினால் குலதெய்வத்திற்கு செலுத்த  வேண்டிய காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் தனியாக எடுத்து வைத்து விட வேண்டும். 
 
பூஜையறையில் இருக்கும் 9 முடிப்புகளில் ஒரு முடிப்பை இரவில் கணவன் மனைவி இருவரும் தங்கள் படுக்கையில், இருவருக்கும் சேர்த்து ஒரே தலையணைக்கு அடியில் வைத்து கொண்டு உறங்க வேண்டும். மறுநாள் காலையில் மனைவி கை, கால்,  முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு, தலையணைக்கு அடியில் வைத்த அந்த துணி முடிப்பை கையில் வைத்துக் கொண்டு, கேது பகவானை மனதில் நினைத்து, “கேது பகவானே எங்களுக்கு குழந்தை பாக்கியம் அருள வேண்டும்” என ஒன்பது முறை வேண்டுதல் வைக்க வேண்டும்.
 
இப்படி வழிபட்டு முடிந்ததும் அந்த முடிச்சை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்ய வேண்டும். பத்தாவது நாள் காலையில் கணவன் மனைவி அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, ஒன்பது கொள்ளு தானியங்கள் முடிந்த 9 துணி பொட்டலங்களையும் எடுத்துக் கொண்டு, ஓடும் நீர்நிலைகளில் விட்டுவிடவேண்டும். இவ்வாறு இந்த பரிகாரம் செய்வதால் கேது பகவான் அருள் புரிவார். இதனால் புத்திர தோஷம் நீங்கப்பெறும்.