1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 11 ஏப்ரல் 2018 (13:20 IST)

ஐபிஎல் போட்டிக்கு எதிராக திமுக ஏன் போராடவில்லை: ஒரு இளைஞரின் ஆவேச கேள்வி

ஐபிஎல் போட்டிக்கு எதிராக தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் போராடியபோது திமுக மட்டும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. குறைந்தபட்சம் இதுகுறித்து திமுக செயல்தலைவர் உள்பட திமுகவினர் யாரும் குரல்கொடுக்க கூட இல்லை
 
இது ஏன் என்று ஒரு இளைஞர் ஆவேசமாக பேசிய வீடியோ இணையதளங்களில் வேகமாக  பரவி வருகிறது. ஐபிஎல் அணிகளில் ஒன்று சன் ரைசஸ் ஐதராபாத். இந்த அணியின் உரிமையாளர் கலாநிதி மாறன். கலாநிதி மாறன், ஸ்டாலினின் நெருங்கிய உறவினர். எனவேதான் ஐபிஎல் குறித்து ஸ்டாலின் உள்பட திமுகவினர் யாரும் குரல் கொடுக்கவில்லை என்று அந்த இளைஞர் கூறியுள்ளார்.
 
மேலும் அரசுக்கு சொந்தமான பொதுச்சொத்துக்களை (டோல்கேட் உடைப்பது) சேதப்படுத்துபவர்கள் தமிழர், ஐபிஎல் போட்டி பார்க்கும் நாங்கள் தமிழர் இல்லையா? என்ன நியாயம் இது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த இளைஞரின் கேள்விகள் அரசியல்வாதிகள் காவிரி, ஐபிஎல் விவகாரங்களில் எந்த அளவுக்கு நாடகமாடுகின்றனர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.