திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (13:09 IST)

சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை தட்டிச்சென்ற குரேசிய அணி கேப்டன்

2018 ஆண்டு பிபாவின் சிறந்த கால்பந்து வீரராக குரேசிய அணியின் கேப்டன் லூகா மோட்ரிச் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2018 ஆண்டு பிபா நடத்தும் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான தேர்வில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, முகமது சலா மற்றும் லூகா மோட்ரிச் ஆகிய மூவரும் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். 
 
இந்நிலையில் ரொனால்டோவையும், முகமது சலாவையிம் பின்னுக்கு தள்ளிய லூகா மோட்ரிச் 2018-ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.