ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (16:35 IST)

பார்சிலோனாவை விட்டு கண்ணீருடன் வெளியேறிய மெஸ்சி! – வைரலாகும் வீடியோ!

பிரபல கால்பந்து அணியான பார்சிலோனா அணியிலிருந்து லியோனல் மெஸ்சி வெளியேறும் நிலையில் அவர் அளித்த பேட்டி வைரலாகியுள்ளது.

பிரபல கால்பந்து அணி வீரரான லியோனல் மெஸ்சி கடந்த 17 ஆண்டுகளாக க்ளப் ஆட்டங்களில் எஃப்சி பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். இவரது சகாக்களான சௌரெஸ் உள்ளிட்டோர் வேறு அணிகளுக்கு மாறிய போதும் தொடர்ந்து பார்சிலோனாவுக்காக விளையாடியவர் மெஸ்சி.

பார்சிலோனா என்றாலே மெஸ்சி என்ற அடையாளம் மாறி தற்போது ஒப்பந்தம் முடிந்து பார்சிலோனா அணியை விட்டு வெளியேறுகிறார் மெஸ்சி. இது கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அணியிலிருந்து விலகும் முன் பேட்டியளித்த மெஸ்சி கண்கள் கலங்க பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.