புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 23 மே 2017 (07:22 IST)

ஆட்டத்தின் போக்கை மாற்றியவர் மலிங்காதான். ஐபிஎல் வெற்றி குறித்து சச்சின்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் ஒரே ஒரு ரன்னில் மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது என்பதை அனைவரும் அறிவோம். இந்த வெற்றியால் இந்த அணியின் உரிமையாளர் நீட்டா அம்பானியை விட, மும்பை அணி வீரர்களை விட சச்சின் தெண்டுல்கர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த வெற்றி குறித்து சச்சின் தெண்டுல்கர் கூறியதாவது:



 


இந்த வெற்றி குறித்து சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால் பிரமாதமான ஆட்டம். பிரேக்கில் நாங்கள் கூடி விவாதித்தோம். மஹேலா ஒரு அருமையான உரையை நிகழ்த்தினார். அதை நான் இங்கு திரும்பவும் இங்கு கூற விரும்பவில்லை. சரியாகச் சிந்திக்க வேண்டும் அதைச் செய்தால் ஆட்டத்திறனை நிகழ்த்திக் காட்டுவது தானாகவே பின் தொடரும். நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று நம்பினோம், ரோஹித்தும் அணி உறுப்பினர்களும் இதைத்தான் செய்தனர்.

எப்போதும் இந்த மகாவாக்கியத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு: “ஒருமுறை சாம்பியன் எப்போதுமே சாம்பியன் தான்”. மலிங்கா யார்க்கர்களுக்கு பெயர் பெற்றவர். கடந்த 10 ஆண்டுகளாக அவர் மும்பை அணிக்கு தனது ஆட்டத்தை நிரூபித்து வருகிறார். இறுதிப் போட்டியிலும் அவர் நிச்சயம் பிரமாதமாக ஆடுவார் என்று கருதினேன். அவர் இந்த சீசன் வழக்கமாக அமைவது போல் அமையவில்லை. ஆனால் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர் என்றால் அது மலிங்காதான் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்.