வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 5 ஜூலை 2020 (11:54 IST)

கார் விபத்தில் முதியவர் பலி – கிரிக்கெட் வீரர் கைது!

இலங்கை அணியின் கிரிக்கெட் வீரரான குஷால் மெண்டிஸ் இலங்கை போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் பேட்ஸ்மேனான குஷால் மெண்டிஸ் கொழும்பு புறநகர் பகுதியான பனாதுராவில் காரில் சென்ற போது முதியவர் ஒருவர் மீது காரை மோதியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அந்த முதியவர் மரணமடைந்துள்ளார். இதையடுத்து மெண்டிஸ் இலங்கை போலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று மேஜிஸ்ட்ரேட் முன்னால் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய குசால் மெண்டிஸ் 76 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் ஆடியுள்ள மெண்டிஸ் தற்போதைய இலங்கை தேசிய அணியில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.