சூப்பர் ஓவரில் நான் இறங்கியது எப்படி ? கோலி பகிர்ந்த ரகசியம் !

Last Modified சனி, 1 பிப்ரவரி 2020 (08:19 IST)
நேற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சூப்பர் ஓவரில் இந்திய கேப்டன் கோலி இறங்கியது எப்படி என்பதை அவரே கூறியுள்ளார்.

நியுசிலாந்து அணிக்கெதிரான நான்காவது டி 20 போட்டியும் நேற்று சமனில் முடிந்ததால் மீண்டும் சூப்பர் ஓவர் மூலம் இந்திய அணி வெற்றி பெற்றது. இதையடுத்து சூப்பர் ஓவரில் நியுசிலாந்து நிர்ணயித்த 13 ரன்கள் என்ற இலக்கை வெற்றிபெற இந்தியாவில் யார் இறங்குவார்கள் என்ற கேள்வி எழுந்தது.

யாரும் எதிர்பார்க்காத விதமாக ராகுலுடன் கோலி இறங்கினார். இதுகுறித்து பின்னர் பேசிய கோலி ‘முதலில் நான் இறங்குவதாக இல்லை. சாம்சனைதான் ராகுலோடு இறக்க முடிவு செய்தோம். ஆனால் ராகுல்தான் நான் இறங்கவேண்டும் எனக் கூறினார். என் அனுபவமும் என் ஆட்டப்பாணியும் கண்டிப்பாக உதவும் எனக் கூறினார். அவர் சொன்னது போலவே நடந்தது’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :