இந்திய அணி வெற்றி பெருவதற்கு தகுதியற்றது: கோலி சர்ச்சை கருத்து!!
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இது குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார் விராட் கோலி.
முதல் டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்களை எடுத்தது. ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து எளிதாக வெற்றி பெற்றது.
இது குறித்து விராட் கோலி கூறியதாவது, சோம்பேறித்தனம் காண்பித்த இந்திய அணி வெற்றி பெற தகுதியுடையது இல்லை என்று சாடியுள்ளார் கோலி. இந்திய வீரர்கள் நினைத்திருந்தால் 230 ரன்கள் எடுத்திருக்கலாம். அதேபோல ஃபீல்டிங்கின்போது சில வாய்ப்புகளை தவறவிட்டு விட்டனர். இது போன்று விளையாடுனால் வெற்றி பெற முடியாது. வெற்றிக்கு தகுதியானவர்களாக இந்திய அணி இல்லை என தெரிவித்துள்ளார்.