புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 7 டிசம்பர் 2021 (10:24 IST)

மூன்று விதமான போட்டிகளிலும் 50 வெற்றிகள்… சாதனைப் படைத்த கோலி!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அனைத்து விதமான போட்டிகளிலும் 50 வெற்றிகளைக் கண்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்திய அணியின் ரன்மெஷின் விராட் கோலி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு அணியைத் தலைமை தாங்கி வருகிறார். சமீபத்தில்தான் அவர் டி 20 போட்டிகளின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டியை அபாரமாக வெற்றி பெற்றதன் மூலம் ஒரு சிறப்பான சாதனையைப் படைத்துள்ளார்.

டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி 20 என அனைத்து விதமான போட்டிகளிலும் 50 வெற்றிகளைக் கண்ட ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.