அவுட்டான கடுப்பில் ஓய்வறைக் கதவை குத்திய கோலி!
இந்திய அணியின் கேப்டன் கோலி நேற்றைய இன்னிங்ஸில் 44 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
இந்திய அணியின் கேப்டன் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சதமே அடிக்கவில்லை. மிகவும் சுமாராக ஆடிவரும் அவர் நேற்றைய இன்னிங்ஸில் சிறப்பாக ஆடி அரைசதம் நோக்கி சென்ற போது 44 ரன்களில் அவுட்டானார்.
இது ரசிகர்களுக்கு மட்டும் ஏமாற்றம் அளிக்கவில்லை கோலிக்கும்தான். இதே கடுப்பில் சென்ற கோலி டிரெஸ்ஸிங் அறையின் கதவை வேகமாக ஓங்கி குத்தி தனது அதிருப்தியையும் கடுப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.