சம்பளத்தை உயர்த்த வேண்டும்: போர்க்கொடி உயர்த்திய கோலி!!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் கிரிகெட் வீரர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி அறிவித்தது.
ஏ கிரேடில் விராட் கோலி, தோனி, அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். ஏ கிரேடு வீரர்களுக்கு ரூ.2 கோடியாக சம்பளம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் வீரர்களுக்கான இந்த சம்பளம் போதாது என்று, இதனை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையே இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான விராட் கோலி வீரர்கள் சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்த வேண்டும் என்று அதிரடியாய் வலியுறுத்தியுள்ளார்.
வீரர்களே சம்பளத்தை உயர்த்தி கேட்பதால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விரைவில் இது குறித்து முடிவு எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.