வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 12 ஆகஸ்ட் 2017 (21:05 IST)

ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு? மிரள வைக்கும் கோலி!!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகின. இந்த செய்தி அதிர்ச்சியாகவுள்ளதாக கோலி தெரிவித்துள்ளார்.


 
 
இது குறித்து கோலி பேசியதாவது, நான் ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்பினேனா? நான் ஆடவில்லை என்று யார் கூறியது? நான் விளையாட வேண்டாம் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் சொல்லுங்கள் நான் விளையாடவில்லை என பதிலதித்துள்ளார்.
 
ஆனால், ஒரு நாள் போட்டிக்கான அணி தேர்வில் பல குழப்பங்கள் ஏற்படக்கூடும். தோனி, யுவராஜ் சிங் ஆகியோரது தேர்வு சவாலாக இருக்ககூடும். மேலும், சுரேஷ் ரெய்னா வேறு உடல் தகுதி பெற்று விட்டதாக கூறியுள்ளார். எனவே, சிக்கலுடன்தான் ஒரு நாள் போட்டிக்கான தேர்வு நடைபெறும் என தெரிகிறது.