கோஹ்லி, பூம்ராவுக்கு ஓய்வு – பிசிசிஐ அறிவிப்பு !

Last Modified திங்கள், 24 ஜூன் 2019 (09:26 IST)
உலகக்கோப்பைப் போட்டிகளுக்குப் பிறகு மேற்கிந்திய தீவுகள் அணியோடு இந்தியா விளையாட இருக்கும் தொடரில் கோலி மற்றும் பூம்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய அணி இப்போது இங்கிலாந்தில் முகாமிட்டு உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி இதுவரை  ஒருத் தோல்வியைக் கூட சந்திக்கவில்லை என்பது நம்பிக்கையளிக்க கூடியதாக உள்ளது. இதையடுத்து அடுத்த மாதம் உலகக்கோப்பை முடிந்தவுடன்  இந்திய அணி அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சென்று வெஸ்ட் இண்டீஸோடு நடக்கும் ஒரு நாள் தொடரில் கோஹ்லி மற்றும் பூம்ராவுக்கு ஓய்வளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதன் பிறகு நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இருவரும் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :