கே.எல்.ராகுல், ஸ்ரேயாஷ் அய்யர் அதிரடி ஆட்டம்! நெதர்லாந்துக்கு இமாலய இலக்கு!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதி வருகின்றன.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதில், ரோஹித் சர்மா 61 ரன்னும், கில் 51 ரன்னும், விராட் கோலி 51 ரன்னும் அடித்தனர், ஸ்ரேயாஷ் அய்யர் இன்று தீபாவளிக்கு வான வேடிக்கை நிகழ்ச்சி மாதிரி நெதர்லாந்து பந்து வீச்சாளர்களின் பந்துகளை அடித்து துவம் செய்தார். அவர் 94 பந்துகளுக்கு 128 ரன்கள் அடித்து அசத்தினர். இதில், 5 சிக்சர்களும் 10 பவுண்டரிகளும் அடக்கம்.
அடுத்து கே.எல்.ராகுலும் தன் பங்குக்கு அதிரடி காட்டினார். எனவே 64 பந்துகளில் 102 ரன்கள் அடித்தார் எனவே இந்திய அணி 50 ஓவர்களில் 4விக்கெட் இழப்பிற்கு 410 ரன்கள் எடுத்தது.
நெதர்லாந்து சார்பில் லீட் 2 விக்கெட்டும், மெக்ரீன் மற்றும் மெர்வ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
411 என்ற இமாலய இலக்கை நோக்கி நெதர்லாந்து இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது.