ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (18:14 IST)

அவன் என்னா அடி அடிக்கிறான்… தன் அணி வீரர்களை எச்சரித்த மெக்கல்லம்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அண்யின் தொடக்க ஆட்டக்காரர்களுக்கு அந்த அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஆண்டு மோசமாக விளையாடி சொதப்பி வருகிறது. அந்த அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக தொடக்க ஆட்டக்காரர்கள் ஷுப்மன் கில் மற்றும் சச்சின் ராணா ஆகியோர் சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுக்காததே காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நேற்றைய டெல்லி அணிக்கு எதிரான தோல்விக்குப் பின்னர் அந்த அணியின் பயிற்சியாளர் இருவருக்கும் மறைமுகமான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதில் ‘அணியில் இடம் வேண்டும் என்றும் நம்பிக்கை வைக்கவேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால் களத்தில் ஆக்ரோஷம் இல்லை. பிருத்வி ஷா எப்படி ஆடினாரோ அப்படி ஒரு ஆட்டத்தைதான் நாங்களும் எதிர்பார்க்கிறோம். கொல்கத்தா வீரர்கள் போதிய ஷாட்களை ஆடவில்லை. இதுவே வழக்கமாக மாறிவிட்டது. ஒரு வீரரின் பழக்கத்தை மாற்ற முடியவில்லை என்றால் வீரரையே மாற்று என்பதை நான் அடிக்கடி கேட்டுள்ளேன்.’ என வீரர்களை எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளார்.