புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Updated : திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (21:21 IST)

பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார் இந்திய வீராங்கனை கமல்ப்ரீத்தி சிங்!

பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார் இந்திய வீராங்கனை கமல்ப்ரீத்தி சிங்!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வட்டு எறிதல் வீராங்கனை கமல்ப்ரீத்தி சிங் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இன்று நடைபெற்ற வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் முதல் சுற்றில் 61.62 மீட்டர் தூரம் வட்டு எறிந்து அதன் பின் இரண்டாவது சுற்றில் அவர் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் அவருக்கு மூன்றாவது சுற்றில் வாய்ப்பு கிடைத்தது
 
மூன்றாவது சுற்றில் அவர் சிறப்பாக செயல்பட்டு 63.70 மீட்டர் எறிந்த போதிலும் அவரை விட  சிறப்பாக ஐந்துபேர் செயல் பட்டதை அடுத்து ஆறாவது இடத்திற்கு கமல்ப்ரித்திசிங் தள்ளப்பட்டார் இதனையடுத்து அவர் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் மிகத் திறமையாக தனது விளையாட்டு விளையாடிய கமல்ப்ரித்திசிங் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைக்கு இந்தியாவின் மீராபாய் சானு வாங்கிக்கொடுத்த வெள்ளி பதக்கம் மற்றும் பிவி சிந்து பெற்றுக்கொடுத்தது வெண்கல பதக்கம் மட்டுமே இந்தியாவின் பதக்கங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது