செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 23 செப்டம்பர் 2020 (10:29 IST)

2 பந்தில் 4 சிக்ஸர் அடித்த ஆர்ச்சர்… வெற்றியைப் பறித்த கடைசி ஓவர்!

சி எஸ் கே அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் ஜோப்ரா ஆர்ச்சர் 30 ரன்கள் அடித்தது வெற்றியை சி எஸ் கே விடம் இருந்து பறித்தது.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய நிலையில் ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக பார்க்கப்படுவது லுங்க் நிக்கிடியின் கடைசி ஓவர். அந்த ஓவரில் மட்டும் 30 ரன்கள் விட்டுக் கொடுத்தார் இங்கிடி.

அந்த ஓவரில் முதல் 2 பந்துகளிலேயே நான்கு சிக்ஸர்களைப் பறக்கவிட்டார் ஜோப்ரா ஆர்ச்சர்.இரண்டாவது பந்தை நோபாலாக வீசிய இங்கிடி அதில் சிக்ஸ் அடித்தார் ஆர்ச்சர். அதன் பிறகு அடுத்த பந்தையும் நோபாலாக வீசிய இங்கிடி அதிலும் சிக்ஸ் அடித்தார் ஆர்ச்சர். அடுத்த பந்தும் ப்ரீஹிட்டாக அமைய அதிலும் சிக்ஸ் அடித்தார் ஆர்ச்சர். இப்படியாக முதல் இரண்டு பந்துகளிலேயே 27 ரன்கள் கிடைத்தன. இந்த ஓவர்தான் வெற்றியை சிஎஸ்கேவிடம் இருந்து பறித்தது.