இதயெல்லாமா போட்டோ எடுத்து போடுவாங்க..? சர்ச்சையில் ரசல் மனைவி

Last Updated: செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (13:55 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அனைவரும் விரும்பக் கூடிய வீரராக ஆண்ட்ரே ரசல் மாறி உள்ளார். இவர் அடிக்கும் சிக்சர்கள் அப்படியுள்ளது. 
 
குறிப்பாக கடைசியாக அவர் மும்பை அணிக்கு எதிராக 40 பந்தில் 8 சிக்ஸர் 6 பவுண்டரிகள் என 80 ரன்கள் குவித்தது பலராலும் பாராட்டப்பட்டது. இந்த போட்டிக்கு பின்னர் ரசல், தன்னுடைய பிறந்த நாளை மனைவிவுடன் சிறப்பாக கொண்டாட வேண்டும் என ஆசைப்பட்டேன். எனவே அவரை மிக மகிழ்ச்சியாக வைக்க வேண்டும் என்பதற்காக நான் மிக அதிரடியாக விளையாடினேன் என தெரிவித்திருந்தார். 
 
ஆம், ரசல் தனது 31 வது பிறந்த நாளை சக வீரர்களுடன் விமர்சையாக கொண்டாடினார். இந்நிலையில் ரசலின் மனைவி ஜேசிம் லோரா வெளியிட்ட ரசலின் புகைப்படங்கள் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ரசலின் குளிக்கும் புகைப்படத்தையும், இருவரும் முத்தமிட்டுக்கொள்ளும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 
இதற்கு முன்னர் ஜேசிம் லோரா தனது இன்ஸாகிராம் பக்கத்தில் ரஸலுக்கு அவர் தொடர்ச்சியாக முத்தம் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ குறித்து பலர் ரசலுக்கு பவர் கிடைத்த ரகசியம் தெரிந்துவிட்டதாக கேலியும் கிண்டலுடன் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :