செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 பிப்ரவரி 2023 (13:15 IST)

அடுத்தடுத்து 5 விக்கெட்டுக்களை இழந்த ஆஸ்திரேலியா.. ஜடேஜா அபார பந்துவீச்சு..!

jadeja
அடுத்தடுத்து 5 விக்கெட்டுக்களை இழந்த ஆஸ்திரேலியா.. ஜடேஜா அபார பந்துவீச்சு..!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே முதலாவது டெஸ்ட் போட்டி இன்று நாக்பூரில் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. 
 
ஆனால் ஆரம்பத்திலேயே தொடக்க ஆட்டக்காரர்கள் விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அதன் பின் ஓரளவுக்கு நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்தது
 
லாபு சாஞ்சே மற்றும் ஸ்டீவன் ஸ்மித் இருவரும் நிலைத்து ஆடினாலும் இவர்களது இருவரது விக்கெட்டையும் ஜடேஜா வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார். அது மட்டும் இன்றி மேட் ரென்ஷா விக்கெட்டையும் ஜடேஜா வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஜடேஜாவின் அபாரமான பந்துவீச்சு காரணமாக தற்போது ஆஸ்திரேலியா அணி 5 விக்கட்டுகளை இழந்து 129 ரகளை மட்டுமே எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran