திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 6 நவம்பர் 2019 (20:21 IST)

ஐபிஎல் 2020: வீரர்களின் ஏலம் தேதி அறிவிப்பு

2020 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என்றும் ஒவ்வொரு அணியும் இந்த ஏலத்தில் 85 கோடி ரூபாய் வரை செலவு செய்யலாம் என்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு அறிவித்துள்ளது
 
கொல்கத்தாவில் நடைபெறும் இந்த ஏலத்தின் தற்போது அணிகள் தக்கவைத்துக் கொண்டுள்ள வீரர்களின் சம்பள தொகையை கழித்துவிட்டு மீதி கையில் உள்ள தொகைக்கு மட்டுமே புதிய வீரர்களை ஏலம் எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த வகையில் எந்தெந்த அணிக்கு எவ்வளவு தொகை கையிருப்பு உள்ளது என்பதை தற்போது பார்ப்போம்
 
டெல்லி அணி: 8.2 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ்: 7.15 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 6.5 கோடி
சன் ரைசர்ஸ் ஐதராபாத்: 5.30 கோடி
பஞ்சாப் அணி: 3.7 கோடி
மும்பை அணி: 3.55 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ்: 3.2 கோடி
பெங்களூரு அணி: 1.8 கோடி
 
இந்த ஆண்டு ஏலத்தில் இங்கிலாந்தின் இயான் மார்கன், வங்கதேசத்தின் முஷ்ஃபிகுர் ரஹிம், ஆஸ்திரேலியாவின் ஸ்டார் ஆகிய வீரர்களை ஏலம் எடுக்க கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது