1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Updated : ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2017 (22:38 IST)

இலக்கை அடையாமலே வெற்றி பெற்ற இந்திய அணி

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில் 3வது ஒருநாள் போட்டி கண்டி நகரில் இன்று நடந்தது.



 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 217 ரன்கள் எடுத்தது.
 
218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி முதலில் சிறிது தடுமாறினாலும், பின்னர் ரோஹித் சர்மா-தோனி கூட்டணியில் வெற்றியை நோக்கி நகர்ந்தது.
 
44 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 210 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென இலங்கை ரசிகர்கள் ஆத்திரத்தில்  மைதானத்தில் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டதால் போட்டி தற்காலிக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் சற்றுமுன்னர் வெளிவந்த தகவலின்படி இந்திய அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.