1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (19:34 IST)

2 மணி நேரம் தாமதமாக தொடங்குகிறது இந்தியா-மே.இ.தீவுகள் போட்டி: என்ன காரணம்?

india vs wi
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்ற நிலையில் இன்று 2வது டி20 போட்டி நடைபெற உள்ளது 
 
இந்த போட்டி இன்று 8 மணிக்கு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் லக்கேஜ்கள் தாமதமாக வந்ததால் இன்று நடைபெற உள்ள மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய இடையிலான 2-வது டி20 போட்டியில் இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
அதாவது இன்று இரவு 10 மணிக்கு தான் போட்டிகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் ஒன்பது முப்பது மணிக்கு இன்றைய போட்டியில் டாஸ் போட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது