1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 24 பிப்ரவரி 2024 (11:11 IST)

கடைசி வரை போராடிய ஜோ ரூட்… முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 353 ரன்களுக்கு ஆல் அவுட்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிகெட் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில் இன்றைய ஆட்ட நேரம் முடிவில் இங்கிலாந்து அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் அடித்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.

இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஜோ ரூட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் சேர்த்தார். இந்தியா சார்பாக ஜடேஜா அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்நிலையில் இந்திய அணி தங்கள் முதல் இன்னிங்ஸை ஆடிவரும் நிலையில் கேப்டன் ரோஹித் ஷர்மா 2 ரன்களில் ஆண்டர்சன் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். தற்போது ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகியோர் விளையாடி வருகின்றனர். இந்திய அணி 19 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.