324 ரன்கள் குவித்த இந்தியா! ரோஹித், தவான் அதிரடி

Last Modified சனி, 26 ஜனவரி 2019 (11:38 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித், தவான் அதிரடியால் 25 ஓவர்கள் வரை விக்கெட் விழவில்லை.

ரோஹித் 87 ரன்களும், தவான் 66 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் அடுத்ததாக களமிறங்கிய விராத் கோஹ்லி, ராயுடு மற்றும் தோனி ஆகியோர்களும் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக தல தோனி 33 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். விராத் 43 ரன்களும், ராயுடு 47 ரன்களும் எடுத்தனர். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 324 ரன்கள் குவித்துள்ளது.
நியூசிலாந்து அணி தரப்பில் பவுல்ட் மற்றும் ஃபெர்குசன் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இந்த நிலையில் 325 என்ற இமாலய இலக்கை நோக்கி இன்னும் சற்று நேரத்தில் நியூசிலாந்து அணி களமிறனக்கவுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :