ஆசியக் கோப்பை ஹாக்கி: தென்கொரியாவை வீழ்த்திய இந்திய அணி

hockey
Last Modified வியாழன், 25 அக்டோபர் 2018 (12:53 IST)
ஆசியக் கோப்பை ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று நடைபெற்ற  ஆட்டத்தில் இந்திய அணி தென்கொரிய அணியை வீழ்த்தியது.
 
மஸ்கட்டில் ஆசியக் கோப்பை ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தென்கொரியா, ஜப்பான், ஓமன் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. ஏற்கனவே இந்திய அணி 4 மேட்சில் வெற்றிபெற்றுள்ளது.
 
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி தென்கொரிய அணியை எதிர்கொண்டது. இதில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள், 4-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :