1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 17 ஜூலை 2015 (21:19 IST)

முதல் டி-20 போட்டி - இந்தியா அபார வெற்றி; 54 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே தோல்வி

ஜிம்பாப்வேவிற்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
 

 
ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் ஆட்டம் இன்று ஹராரே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
 
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக ராபின் உத்தப்பா 35 பந்துகளில் [2 பவுண்டரிகள்] 39 ரன்களும், முரளி விஜய் 19 பந்துகளில் [5 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] 34 ரன்களும் எடுத்தனர். ஜிம்பாப்வே தரப்பில் கிறிஸ் போஃபு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 
பின்னர் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக மசகட்ஸா 28 ரன்கள் குவித்தார்.
 
இதன் மூலம் இந்திய அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அக்ஸர் படேல் 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  3 விக்கெட்டுகளை வீழ்த்திய அக்ஸர் படேலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.