இந்தியாவிடம் சரணடைந்த மே.இ.தீவுகள்: தோல்வியே பெறாத ஒரே அணியாக இந்தியா

Last Modified வியாழன், 27 ஜூன் 2019 (22:15 IST)
இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று மான்செஸ்டர் மைதானத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 34வது லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது

விராத் கோஹ்லி, தோனி, பாண்ட்யா அதிரடியில் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 268 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 269 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மே.இ.தீவுகள் அணி,
34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து
143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி அடைந்துள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த உலகக்கோப்பை தொடரில் ஒரு தோல்வி கூட இல்லாமல் வெற்றி நடைபோடும் ஒரே அணியாக இந்தியா உள்ளது. இன்றைய வெற்றியால் இந்திய அணி 11 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்திய அணிக்கு இன்னும் மூன்று போட்டிகள் இருப்பதால் இன்னும் ஒரு போட்டியில் வென்றாலே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :