1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 9 பிப்ரவரி 2017 (11:40 IST)

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: முதல் ஓவரில் ஒரு விக்கெட் இழந்தது இந்தியா!!

முஷ்பிகுர் ரஹிம் தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. 


 
 
இந்தியா- வங்காளதேச அணிகள் மோதும் இந்த டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் இன்று காலை தொடங்கியது. காயம் குணமடைந்து உடற்தகுதி பெற்ற நிலையில், இன்றைய ஆட்டத்தில் ரகானே சேர்க்கப்பட்டுள்ளார். கருண் நாயருக்கு வாய்ப்பு இல்லை.
 
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. துவக்க வீரர் லோகேஷ் ராகுல், முதல் ஓவரில் 4 பந்துகளை சந்தித்து 2 ரன்கள் எடுத்த நிலையில், தஸ்கின் அகமதுவிடம் விக்கெட்டை இழந்தார். 
 
இதையடுத்து முரளி விஜய், புஜாரா இருவரும் நிதானமாக விளையாடி வருகின்றனர்.