’உங்களைப் போல விளையாட விரும்புகிறேன்’ - கோலிக்கு நன்றி கூறிய சாய்னா


லெனின் அகத்தியநாடன்| Last Updated: திங்கள், 13 ஜூன் 2016 (17:53 IST)
இன்னும் பல போட்டிகளில் உங்களை போன்று ஆக்ரோஷமாக விளையாடி வெற்றி பெற விரும்புகிறேன் என்று இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெய்வால் தெரிவித்துள்ளார்.
 
 
ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் சாய்னா நெய்வால் 2ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
 
ஓபன் பேட்மின்டனில் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள சாய்னா நெஹ்வாலுக்கு, இந்திய பேட்மின்டன் சங்கம் (பிஏஐ) சார்பில் ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சாய்னாவின் சாதனைக்கு, இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்து இருந்தார்.
 
விராட் கோலியின் வாழ்த்துக்கு பதில் கூறிய சாய்னா, ”இன்னும் பல போட்டிகளில் உங்களை போன்று ஆக்ரோஷமாக விளையாடி வெற்றி பெற விரும்புகிறேன். அதற்காக கடுமையாக உழைக்க முயற்சிப்பேன். உங்களுக்கு நன்றிகள்” என்று கூறியுள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :