திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 2 ஏப்ரல் 2023 (17:48 IST)

205 இலக்கு கொடுத்த ராஜஸ்தான்.. முதல் ஓவரிலேயே 2 விக்கெட் இழந்த ஐதராபாத்..!

rr vs hyd
ஐபிஎல் தொடரில் இன்று ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. 
 
தொடக்க ஆட்டக்காரர்களான யாஸ்வி ஜாஸ்மால் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகிய இருவரும் தலா 54 ரன்கள் எடுத்தனர். கேப்டன் சஞ்சு சாம்சன் 55 ரன்கள் எடுத்துள்ளார். 
 
இந்த நிலையில் 204 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிக் கொண்டிருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட் இழந்து தத்தளித்து வருகிறது.
 
தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக்சர்மா மற்றும் முக்கிய பேட்ஸ்மேன் ராகுல் திரிபாதி ஆகிய இருவருமே டக் அவுட் ஆகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து திணறி வரும் ஐதராபாத் அணி மீளுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva