உலகக்கோப்பை டி20 தகுதிப்போட்டி: 7 ஓவர்களில் இலக்கை எட்டிய ஹாங்காங்
உலகக் கோப்பை டி20 போட்டி விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மொத்தம் 14 அணிகள் விளையாடி வருகின்றன
இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஒரு போட்டியில் நைஜீரியா மற்றும் ஹாங்காங் அணிகள் மோதின. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நைஜீரிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனை அடுத்து களத்தில் இறங்கிய அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் மட்டுமே எடுத்தது
இதனை அடுத்து 82 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஹாங்காங் காணி 7.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
ஸ்கோர் விபரம்:
நைஜீரியா; 81/8
ஒனிகோயி: 18
ரன்ஸேவே: 17
அஜிகுவின்: 14
ஹாங்காங்: 82/5 7.1 ஓவர்கள்
கே.டி.ஷா: 25
நிஜாகத் கான்: 21
ஹரூன் அர்ஷத்: 17