சென்னை வந்த சிஎஸ்கே வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு

Last Modified திங்கள், 9 ஏப்ரல் 2018 (08:33 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியின் வெற்றியை ருசித்த சிஎஸ்கே அணி, வரும் 10ஆம் தேதி சென்னையில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளது.

ஆனால் இந்த போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்றும் மீறினால் போட்டியை நடத்த விடமாட்டோம் என்றும் ஒருசில அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன,

இந்த நிலையில் நேற்று வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீர்ர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கபப்ட்டது. அதுமட்டுமின்'றி அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து பேருந்து ஒன்றில் அழைத்து செல்லப்பட்ட சிஎஸ்கே வீரர்கள் ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். ஓட்டல் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :