தோனியுடன் ஒப்பிட்டு ரிஷப் பண்ட்டை காலி பண்ணாதீர்கள் – கில்கிறிஸ்ட் கருத்து !

Last Updated: புதன், 6 நவம்பர் 2019 (10:22 IST)
ரிஷப் பண்ட்டை தோனியுடன் ஒப்பிட்டு அவரை காலி செய்யாதீர்கள் என ஆஸ்திரேலியா ஜாம்பவான் கிரிக்கெட்டர் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நிலையற்ற தனது ஆட்டத்தால் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். தோனியை ஓரம் கட்டிவிட்டு பண்ட்டுக்கு அணியில் இடம் கொடுக்கப்படுவது தோனி ரசிகர்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது. இதனால் பண்ட்டின் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பாணியை தோனியோடு ஒப்பிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் பண்ட் குறித்து பேசியுள்ளார். அவர் ‘தோனியுடன் பந்த்தை ஒப்பிட்டு காலி செய்யாதீர்கள். ஏனெனில் இன்னொரு தோனியை உருவாக்க முடியாது என்பது தெரிந்ததே. ஆஸ்திரேலியாவின் சிறந்த அணியில் இயன் ஹீலி தேர்வு செய்யப்பட்ட போது, நான் அவராக உருவாக வேண்டும் என நினைத்தேன். ஆனால் நான் நானாக இருந்து கொண்டே அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்பினேன். இதையேதான் நான் ரிஷப் பண்ட்டுக்கும் சொல்வேன்.’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :