திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2019 (07:38 IST)

ஹர்பஜனிடம் ஆதரவு கேட்ட கங்குலி – டிவிட்டரில் மலரும் நினைவுகள் !

பிசிசிஐ தலைவராக போட்டியின்றித் தேர்வாகியுள்ள இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக ஒரு மனதாகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பிசிசிஐ தலைவராகப் பதவியேற்கவுள்ளார். அவரின் பதவியேற்பு விழா வரும் அக்டோபர் 23 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்நிலையில் அவருக்கு நாட்டின் பல முனைகளில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ‘உங்களை உருவாக்கியதில் மேற்கு வங்கம் பெருமைக் கொள்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய சுழற்பந்து வீச்சாளரும் கங்குலியின் தலைமையின் கீழ் கண்டெடுக்கப்பட்டவருமான ஹர்பஜன் சிங் டிவிட்டரில் ‘பிசிசிஐ தலைவராகப் பொறுப்பேற்கவுள்ள உங்களுக்கு வாழ்த்துகள். நீங்கள் மேலும் முன்னேற வாழ்த்துகள்’ எனத் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த கங்குலி ‘ நன்றி பஜ்ஜி… எப்படி இந்திய அணி வெற்றி பந்து வீசினீர்களோ அதுபோல இப்போதும் உங்கள் ஆதரவு எனக்குத் தேவை’ எனத் தெரிவித்துள்ளார்.