1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 16 செப்டம்பர் 2021 (11:10 IST)

10 பந்து வரை மட்டுமே தோனி விளையாட விரும்புகிறார்… கம்பீர் விமர்சனம்!

தோனி தன்னுடைய இன்னிங்ஸ்களில் 8 முதல் 10 பந்து வரை விளையாடும் பிளேயராக ஆகி விட்டார் என கம்பீர் தெரிவித்துள்ளார்.

சென்னை அணியின் கேப்டன் எம் எஸ் தோனி சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் இப்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் தோனி தனது பேட்டிங் பொசிஷனை நான்காவது இடத்துக்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். மேலும் அதுபற்றி பேசும்போது ‘அப்போதுதான் வீரர்களுக்கு ஒரு நம்பிக்கை வரும்’ எனக் கூறியுள்ளார்.

மேலும் தோனி பற்றி ‘அவர் 8 முதல் 10 பந்துகள் வரை மட்டுமே விளையாடும் ஆட்டக்காரராக ஆகிவிட்டார். அவரால் அடித்து ஆட முடியும். ஆனால் அவர் சர்வதேசக் கிரிக்கெட் விளையாடததால் அவரால் அதிரடியாக விளையாட முடியவில்லை’ எனக் கூறியுள்ளார்.