திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 23 ஜூலை 2021 (07:51 IST)

இன்று தொடங்குகிறது ஒலிம்பிக் போட்டிகள்: சுமார் 11000 வீரர்கள் குவிந்தனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்க உள்ளதால் டோக்கியோ நகரமே விழா கோலம் பூண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 2021 ஆம் ஆண்டுக்கு மாற்றப்பட்டது 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அனைத்து நாடுகளின் வீரர்கள் வீராங்கனைகள் டோக்கியோ சென்ற நிலையில் இன்று ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்த ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி உள்பட பல பிரபலங்களுக்கு வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று ஜப்பானில் தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் அந்த போட்டியில் கலந்துகொள்ளும் சுமார் 11 ஆயிரம் வீரர்களும் கலந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தொடக்க நிகழ்ச்சியில் பின்னர் அனைத்து போட்டிகளிலும் ஒவ்வொன்றாக தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது