1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 19 மே 2022 (10:02 IST)

சர்வதேச போட்டிகளில் விளையாட ரஷ்யாவுக்கு தடை! – சர்வதேச கூடைப்பந்து சம்மௌனம்!

Russia
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ளதால் கூடைப்பந்து போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னமும் போர் தொடர்ந்து வருகிறது. உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி ரஷ்யா உக்ரைன் மீது போர் நடத்தி வரும் நிலையில் அண்டை நாடான பெலாரஸும் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனுக்கு எதிராக போர் நடத்தி வரும் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகள் மீது உலக நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், சர்வதேச விளையாட்டுகள் பலவற்றிலும் விளையாட தடை விதிக்கப்பட்டு வருகிற்து. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ரஷ்யாவில் நடைபெற இருந்த நிலையில் போர் காரணமாக அங்கிருந்து இந்தியாவிற்கு மாற்றப்பட்டதுடன், ரஷ்யா பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது சர்வதேச கூடைப்பந்து சம்மௌனமான FIBA, மறு உத்தரவு வரும் வரை பெலாரஸ் மற்றும் ரஷ்ய நாடுகள் சர்வதேச கூடைப்பந்து போட்டிகளில் பங்கேற்க தடை விதித்துள்ளது.