1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 2 செப்டம்பர் 2021 (15:33 IST)

டாஸ் வென்ற இங்கிலாந்து: அஸ்வின் இல்லாமல் மீண்டும் களமிறங்கும் இந்தியா

டாஸ் வென்ற இங்கிலாந்து: அஸ்வின் இல்லாமல் மீண்டும் களமிறங்கும் இந்தியா
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் 3-வது கிரிக்கெட் போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் இந்தியா பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் அஸ்வின் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அணியில் களமிறக்கப்படாதது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இன்று விளையாடும் இந்திய, இங்கிலாந்து அணிகளின் வீரர்கள் பின்வருமாறு:
 
இந்தியா: கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, புஜாரா, விராத் கோஹ்லி, ரஹானே, ரிஷப் பண்ட், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், பும்ரா மற்றும் சிராஜ்
 
இங்கிலாந்து: பர்ன்ஸ், ஹமீது, டேவிட் மாலன், ஜோ ரூட், போப், பெயர்ஸ்டோ, மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், ஓவர்டோன், ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன்