செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (06:05 IST)

ஒரே ஓவரில் 40 ரன்கள்: 54 வயது இங்கிலாந்து வீரர் சாதனை

இங்கிலாந்தை சேர்ந்த உள்ளூர் போட்டி ஒன்றில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு இளம் வீரர் ஒரே ஓவரில் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை செய்தார். இந்த நிலையில் இன்னொரு உள்ளூர் போட்டியில் ஒரு வீரர் ஒரே ஓவரில் 42 ரன்கள் எடுத்துள்ளார். ஆறு பந்திலும் சிக்சர் அடித்தாலும் 36 ரன்கள் தானே எடுக்க முடியும், எப்படி 45 ரன்கள் என்று உங்கள் மனதில் தோன்றுகிறது அல்லவா?



 
 
240 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஸ்வின்ப்ரூக் என்ற அணி கடைசி ஓவரில் 35 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையில்  ஸ்டீவ் மெக்கோம் என்ற 54 பேட்ஸ்மேன், 40 ரன்களை எடுத்து வெற்றியை பெற்றுத் தந்துள்ளார். அவ்ர் எடுத்த ரன்கள் நோ பால் சிக்ஸ், சிக்ஸ், ரன் இல்லை, நோ பால் பவுண்டரி, பவுண்டரி, சிக்சர், சிக்சர், சிக்ஸர் ஆகியவைதான்
 
இதனால் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற வருத்தத்தில் இருந்த ஸ்வின்ப்ரூக் அணி எதிர்பாராத வெற்றியை அடைந்தது.