வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 11 பிப்ரவரி 2019 (08:16 IST)

வுட், அலி அபார பந்துவீச்சு: 154 ரன்களில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள் அணி!

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியா தீவுகள் அணி பந்துவீச முடிவு செய்ததால் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 277 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த மே.இ.தீவுகள் அணி 154 ரன்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. வுட் 5 விக்கெட்டுக்களையும், அலி 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்த நிலையில் முதல் இன்னிங்ஸில் 123 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி தற்போது 2வது இன்னிங்ஸை விளையாடியது. இன்றைய ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்து மொத்தம் 142 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று 2-0 என்ற முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.