1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 21 ஜூலை 2020 (06:35 IST)

மே.இ.தீவுகள் அணியை வீழ்த்தியது இங்கிலாந்து: 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

மே.இ.தீவுகள் அணியை வீழ்த்தியது இங்கிலாந்து
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முடிவடைந்த நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி, மே.இ.தீவுகள் அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய இங்கிலாந்து அணி முதல் இன்னின்ங்சில் 9 விக்கெட்டுக்களை இழந்து 469 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து மே.இ.தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 
 
முதல் இன்னிங்ஸில் 182 ரன்கள் முன்னிலையில் இருந்த இங்கிலாந்து அணி தனது 129 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் மே.இ.தீவுகள் அணிக்கு 312 ரன்கள் இலக்கு என்ற நிலை இருந்தது. இந்த இலக்கை நோக்கி விளையாடிய மே.இ.தீவுகள் அணி 198 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்ததால் இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 469/9 டிக்ளேர்
 
மே.இ.தீவுகள் முதல் இன்னிங்ஸ்: 287/10
 
இங்கிலாந்து 2வது இன்னின்ங்ஸ்: 129/3 டிக்ளேர்
 
மே.இ.தீவுகள் 2வது இன்னின்ங்ஸ்: 198/10
 
ஆட்டநாயகன்: பென் ஸ்டோக்ஸ்
 
இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி: ஜூலை 24