1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 1 நவம்பர் 2022 (17:36 IST)

இங்கிலாந்து - நியூசிலாந்து போட்டியில் யாருக்கு வெற்றி? புள்ளிப்பட்டியலில் என்ன மாற்றம்?

eng vs nz
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது 
 
இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தன. இதனை அடுத்து 180 என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது
 
இங்கிலாந்து அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து அந்த அணி 5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. தற்போது ஆஸ்திரேலியா இங்கிலாந்து நியூசிலாந்து ஆகிய மூன்று அணிகள் ஐந்து புள்ளிகள் பெற்றிருப்பதால் அடுத்த சுற்றுக்கு போகும் அணிகள் எவை என்பதை அடுத்து வரும் போட்டிகள் முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva