வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 4 ஜூலை 2018 (06:32 IST)

உலகக்கோப்பை கால்பந்து: பெனால்ட்டி ஷூட்டில் வென்ற இங்கிலாந்து: பரிதாபத்தில் கொலம்பியா

உலகக்கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக ரஷ்யாவில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நாக் அவுட் போட்டிகளின் கடைசி இரண்டு ஆட்டங்கள் நடந்தது. முதல் போட்டியில் சுவிட்சர்லாந்து அணியை ஸ்வீடன் அணி வென்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பெனால்ட்டி ஷுட் முறையில் கொலம்பியா அணியை இங்கிலாந்து அணி 4-3 என்ற கோல்கணக்கில் வென்று, காலிறுதிக்கு தகுதி பெற்றது
 
நேற்று நடைபெற்ற கொலம்பியா-இங்கிலாந்து போட்டியில் இரு அணிகளும் ஆக்ரோஷமாகவும், தடுப்பாட்டத்தையும் கையாண்டதால் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் 0-0 என்ற கோல்கணக்கில் சமநிலை இருந்தது.
 
இதனையடுத்து இரண்டாவது பாதியில் 57வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி இங்கிலாந்து வீரர் ஹாரிகேன் ஒரு கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து 1-0 என்ற கோல்கணக்கில் முன்னிலை வகித்தது. ஆனால் இந்த கோலுக்கு பதிலடியாக கொலம்பியா வீரர் யெரிமினா அபாரமாக ஒரு கோல் அடித்ததால் மீண்டும் சமநிலை ஆனது. இதனையடுத்து இரு அணிகளும் கூடுதல் நேரத்தில் கூட கோல் அடிக்காததால் வெற்றி பெறும் அணி எது என்பதை முடிவு செய்ய பெனால்ட்டி ஷூட் முறை கையாளப்பட்டது. இதில் இங்கிலாந்து 4 கோல்களும் கொலம்பியா 3 கோகளும் போட்டதால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த அணி காலிறுதியில் ஸ்வீடன் அணியுடன் மோதும்