செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 7 நவம்பர் 2021 (09:37 IST)

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி… நூலிழையில் வாய்ப்பிழந்த தென் ஆப்பிரிக்கா!

நடந்து வரும் டி 20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் குருப் பி பிரிவில் இருந்து அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளன.

டி 20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டன. இந்நிலையில் குருப் பி பிரிவில் உள்ள அனைத்து அணிகளும் தங்கள் போட்டிகளை முடித்துவிட்டன. அந்த பிரிவில் இருந்து இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளன.

அந்த பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளும் தலா 8 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில் ரன்ரேட் அடிப்படையில் ஆஸியும், இங்கிலாந்தும் தகுதி பெற்றுள்ளன. அதே போல ஏ பிரிவில் பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது. இன்று நடக்கும் நியுசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவை வைத்து மற்றொரு அணி எது என்பது தெரியவரும்.