புதன், 11 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 3 ஆகஸ்ட் 2024 (09:10 IST)

ஆண் என குற்றம்சாட்டப்படும் இமேன் கெலிஃப்க்கு ஆதரவாக இந்திய வீராங்கனை டூட்டி சந்த்!

பாரிஸில் நடந்து வரும் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அல்ஜீரியாவைச் சேர்ந்த குத்துச் சண்டை வீராங்கனையான இமேன் கெலிஃப் சமீபத்தில் இத்தாலியைச் சேர்ந்த வீராங்கனை ஏஞ்சலாவுக்கு எதிரான போட்டியில் வென்றார்.

அதன் பின்னர் அவரை சுற்றி சர்ச்சைகள் கிளம்பத் தொடங்கியுள்ளன. அவர் ஒரு பெண் அல்ல என்றும் ஆண் என்றும் அவரைப் பற்றி வதந்திகள் பரவுகின்றன. இதுகுறித்து இந்திய வீராங்கனை டூட்டி சந்த் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

அதில் “இமேன் பல சோதனைகளுக்குப் பிறகே ஒலிம்பிக்கில் விளையாட அனுமதிக்கப்பட்டிருப்பார். அவர் ஒரு ஆண் என்றால் அவரால் ஒலிம்பிக்கில் விளையாடி இருக்கவே முடியாது. அவர் போட்டிகளில் தோற்ற போதெல்லாம் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழவில்லை. இப்போது அவர் போட்டியில் வென்றதும் இந்த குற்றச்சாட்டுகள் எழ ஆரம்பித்துள்ளன” என கூறியுள்ளார்.