திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 17 பிப்ரவரி 2022 (19:44 IST)

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சானியா - லூசி ஜோடி அரையிறுதிக்கு தகுதி!

துபாயில் தற்போது துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா பிரமாதமாக விளையாடி வருகிறார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இன்று நடந்த மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த லூசி ஹரடெக்ஸ்கா ஆகியோர் செர்பியா மற்றும் ஜப்பான் வீராங்கனைகளை எதிர்த்து விளையாடினார் 
 
இருதரப்பும் ஆவேசமாக விளையாடிய போதிலும் சானியா-லூசி ஹரடெக்ஸ்கா  ஜோடி 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்றனர்.
 
 இந்த வெற்றியை அடுத்து சானியா மிர்சா  - லூசி ஹரடெக்ஸ்கா ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அரையிறுதிக்கு தகுதி பெற்ற சானியா மிர்சா - லூசி ஹரடெக்ஸ்கா ஜோடிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது