திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 4 மார்ச் 2015 (18:40 IST)

தோனி மகளின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட மனைவி சாக்‌ஷி

இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மகளினது புகைப்படத்தை அவருடைய மனைவி சாக்‌ஷி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
 
இந்திய அணியின் கேப்டன் தோனிக்கும், ஷாக்சிக்கும் இடையே கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி குர்கானில் உள்ள போர்டிஸ் தனியார் மருத்துவமனையில் ஷாக்சிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
 

 
ஆனால் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இருந்ததால் தோனி மகளை பார்க்க இந்திய திரும்பாமல் இருந்தார். இது குறித்து, ”இப்போது நாட்டுக்கான கடமையில் ஈடுபட்டுள்ளதால் மற்ற விஷயங்கள் காத்திருக்கட்டும். உலகக்கோப்பை போட்டிதான் மிக முக்கியம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
 

 
இந்நிலையில், தோனியின் மனைவி சாக்‌ஷி தனது ட்விட்டரில், குழந்தை தாயின் கையைப் பிடித்துள்ளது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படத்திற்கு கீழே ‘மூட்டைக்கணக்கான மகிழ்ச்சிகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.