திங்கள், 30 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 20 நவம்பர் 2021 (17:29 IST)

அடுத்தாண்டு ஐ.பி.எல் தொடரில் விளையாடுவாரா? தோனி கூறிய பதில்

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடும் போது குறித்த கேள்விக்கு தல தோனி அவர்கள் பதில் அளித்துள்ளார்
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை வென்றதை அடுத்து பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. முதலமைச்சர் முக ஸ்டாலின், தல தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர் 
 
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தோனியிடம் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவீர்களா? என்ற கேட்ட கேள்விக்கு அதைப்பற்றி நான் இன்னும் யோசிக்கவில்லை இன்னும் சில மாதங்கள் இருக்கின்றதே, இப்போதுதான் நவம்பர். அடுத்து ஐபிஎல் ஏப்ரல் மாதம் தான் ஐபிஎல் நடக்கும். எனவே 2022 ஐபிஎல் தொடரில் பங்கேற்பது குறித்து அப்போது பார்க்கலாம் என்று பதிலளித்துள்ளார்
 
எனவே அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து இன்னும் தல தோனி முடிவு எடுக்கவில்லை என்பது தெரியவருகிறது